குறைந்த விலை ஸ்மார்ட் வாட்ச்!

smart watch01

மார்கெட்டில் பல ஸ்மார்ட் வாட்ச்கள் இருந்தாலும், விலை அதிகம், பயன்படுத்துவதில் சிக்கல் என பல புகார்கள். குறிப்பாக, குறைந்தது 15 ஆயிரத்துக்கும் மேல்தான் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ஆரம்பமாகிறது.

ஆனால், ‘‘நாங்கள் உருவாக்கியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச்சின் (ரிஸ்ட் பேண்ட்) விலை, 10 டாலர்களுக்கும் குறைவு!’’ என்கிறார்கள் ஃபாஸ்ட்பாக்ஸ் (Fastfox) நிறுவனத்தினர். மேலும், முதல் 100 ரிஸ்ட் பேண்டுகள், 7 டாலருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெஷல் என்ன?

இந்த ஃபாஸ்ட்பாக்ஸ் வாட்ச்சை கையில் அணிந்து, ஆண்டிராய்டு மற்றும் IOS போன்களில் கனெக்ட் செய்துகொள்ளலாம். பின், போன் மூலமே அந்த வாட்சை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச்சை கையில் அணிந்த நொடியில் இருந்து, அது நமது அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்துப் பதிவு செய்துகொள்ளும். நமது உடல் பற்றிய அத்தனை டேட்டாக்களையும் சேகரித்துக்கொள்ளும். இதன் எடை 11 கிராம் தான் என்பதால், கட்டியிருப்பதே தெரியாது.

பயன்கள்

நம் உடல் ஆரோக்கியத்தை துல்லியமாகக் கண்காணிக்கும் கருவி இது. நமது உடல் இயக்கங்களை கண்காணித்து, அதன் தரம் பற்றிச் சொல்லும். மேலும் அதை எப்படி மேம்படுத்தலாம் என்று டிப்ஸ்கள் கொடுக்கும். அதாவது, நாம் நடந்தால், எவ்வளவு தூரம் நடந்து இருக்கிறோம், அதில் எவ்வளவு தூரம் மெதுவாக நடந்தோம், எவ்வளவு தூரம் வேகமாக நடந்தோம், இந்த நடைபயிற்சியால் நம் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளன என்பதைக் காட்டும்.

அதேபோல நாம் உறங்கும்போது கட்டியிருந்தால், எவ்வளவு நேரம் உறங்கினோம், அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், நிம்மதியான உறக்கத்துக்கான ஆலோசனைகள் என்று எல்லாம் கூறும். இப்படி ஓடும்போது, நடைபயிற்சி செய்யும்போது என நம் உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் உள்வாங்கி, அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, நாம் கனெக்ட் செய்திருக்கும் போனின் திரையில் காட்டும். ஒரு நாளில் நம் உடலில் எவ்வளவு கலோரி குறைந்திருக்கிறது, எவ்வளவு கலோரி கூடியிருக்கிறது என்பதையும் காட்டும் இந்த ஸ்மார்ட் வாட்ச், ஸ்போர்ட்ஸ் லைஃபுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அலர்ட்கள்

நம் செல்போனுக்கு கால், மெசேஜ் வந்தால், வாட்ச்சில் இருக்கும் LED லைட் ஒளிர்ந்து அலர்ட் கொடுக்கும். இதில் அலாரம் வசதியும் உள்ளது. இதில் இருக்கும் பட்டன் செல்கள் அதிக திறன் கொண்டவை. அதனால், மாதம் ஒரு முறை இதை சார்ஜ் செய்தால் போதும்.

சிறப்பம்சம்

‘ஃபாஸ்ட்பாக்ஸ்’ நிறுவனம் இப்போது நிர்ணயத்திருக்கும் 10 டாலர் விலைப்படி, இந்திய ரூபாய் மதிப்பில் 700 ரூபாய்க்குள் நமக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கும்.

Leave a Reply