பெங்களூர் குண்டுவெடிப்பில் பவானியின் உடல் சென்னை வந்தது. பொதுமக்கள் அஞ்சலி

bhavaniபெங்களூரில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பரிதாபமாக பலியான சென்னையை சேர்ந்த பவானியின் உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள அண்ணாசாலையில் உள்ள தனது வீட்டில் பவானி தன்னுடைய கணவர் பாலன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தைகளின் அரையாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி பெங்களூரில் உள்ள கணவரின் அண்ணன் மகேந்திரன் வீட்டிற்கு விடுமுறையை கழிக்க சென்றிருந்த பவானி, அங்கு ஞாயிறு அன்று சர்ச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த போது வெடிகுண்டு சம்பவத்தில் சிக்கி பலியானார்.

நேற்று பவானியின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். இன்று பவானியின் இறுதிச்சடங்கு நடைபெறுமென கூறப்படுகிறது.

Leave a Reply