ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து வெளியே செல்ல முயன்ற 116 பேர் கொலை. அதிர்ச்சி தகவல்

isisசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் சமீபத்தில் தங்கள் இயக்கத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற 116 பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சேர்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து சென்ற பல இளைஞர்கள் சில நாட்களிலேயே அவர்களுடைய கொள்கை பிடிக்காமல் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு வெளியேற முயற்சி செய்பவர்களை பிடித்து அவர்களில் சுமார் 116 பேர்களை சமீபத்தில் கொலை செய்துள்ளதாக சிரியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியா ஊடகத்தை சேர்ந்த ரமி அப்துல்ரகுமான் என்பவர் ரியூட்டர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த வருடம் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில்  இருந்து தப்பிக்க நினைத்த 1,175 பேர்களை கொலை செய்துள்ளனர் என்றும் இதில் எட்டு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரித்துள்ளார்.

Leave a Reply