நாம் இதுவரை விரல்களால் மிக வேகமாக டைப் செய்பவர்களைத்தான் பார்த்துள்ளோம். ஆனால் ஐதராபாத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்பவர், தனது மூக்கால் மிக வேகமாக டைப் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இவர் தன்னுடைய மூக்கால் 47.44 வினாடிகளில் 103 வார்த்தைகள் டைப் செய்து கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு 3.43 வினாடிகளில் விரல்களால் A to Z ஆங்கில எழுத்துக்களை டைப் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்கினால் டைப் செய்து சாதனை படைக்க இவர் கடந்த மூன்று வருடங்களாக தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் இவர் கின்னஸ் அதிகாரிகள் முன்பு மூக்கினால் டைப் செய்யும் கின்னஸ் சாதனையை படைத்து அதற்குரிய சான்றிதழை பெற்றுக்கொண்டார்.