தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.எட் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்பின் பெயர்: பி.எட் (2 வருடங்கள்)
தகுதி: பி.லிட், பி.காம், பி.ஏ.,(தமிழ், வரலாறு, ஆங்கிலம், புவியியல், அப்ளைடு ஜியாக்ரபி, பி.எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்)ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
நேரில் பெற ரூ.600, தபாலில் பெற ரூ.650 இதனை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்ற பெயரில் தஞ்சாவூரில் மாற்றத்தக்க வகையில் டிடி.,யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.sastra.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி ரூ.650-க்கான டிடி-யுடன் இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 31.12.2014.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.