தமிழகத்தில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள். பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமா?

maoistsதமிழகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை காரணமாக தமிழக எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போலீசார்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக் மாவோயிஸ்டுகளின் பார்வை தென் மாநிலங்களில் பதிந்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தை அவர்கள் குறிவைத்துள்ளதாகவும் மத்திய, மாநில உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கர்நாடக, கேரள, தமிழக எல்லையோர வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் 5 குழுக்களாக முகாமிட்டுள்ளனதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்களும் பல பெண்களும் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நவீன ஆயுதங்கள், கண்ணி வெடிகள், கையெறி குண்டுகள், ஏகே 47 போன்ற வகை துப்பாக்கிகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழக கேரள எல்லையான பாலக்காடு, சத்தியமங்கலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், குமுளி, ஸ்ரீவில்லிபுத்தூர், களியாக்கவிளை, புளியரை உள்பட வன அலுவலகங்களில் மாவோயிஸ்டுகளின் முதல்கட்ட தாக்குதல் இருக்கும் என்றும், அதற்குள் மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழக எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply