தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ’க்களில் பங்கு பெறும் 12 வயதுக்கு குறைவான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் அநாகரிகமாக நடத்தப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகளை சரியான பின்பற்றாத தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய ஒளிபரப்பு மைய பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் ம் பிரிவு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொலைக் காட்சி சேனல்களில் ஒளிபரப் பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் வகையில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பாக எங்களுக்கு வரும் புகார்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன. இதனை தடுக்க நாடு முழுவதும் செயல்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்டோர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக கடந்த ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால் இப்போது புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் மீது அதிகமான புகார்கள் வந்துள்ளன என அந்த அதிகாரி தெரிவித்தார்.