இலங்கையில் வரும் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பொது வேட்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்சேவுக்கு தமிழர்கள் பகுதியில் சுத்தமாக செல்வாக்கு இல்லை என்றும், தமிழர்கள் வாக்குகள் மொத்தமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கே செல்லும் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறியதன் விளைவாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் மூலம் கள்ள ஓட்டு போட ராஜபக்சே சதி திட்டம் செய்துள்ளதாக முன்னாள் பிரதமர், ரனில் விக்ரமசிங்கே திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
மைனாரிட்டியாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் மூலம் கள்ள ஓட்டு போட திட்டம் வகுத்துள்ளதாகவும், அந்த பகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் இன்று அளித்த பேட்டி ஒன்றி அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும், பயிற்சி ராணுவ வீரர்கள் மூலம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தலை கண்காணிக்க சர்வதேச பார்வையாளர்கள் வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.