போலி மதுபானங்கள் தயாரித்து டாஸ்மாக் பாட்டில்களுடன் கலந்த அதிமுக கவுன்சிலர்.

tasmac fakeடாஸ்மாக் மதுபானங்களை திருடிவிட்டு அதற்கு பதிலாக தான் சொந்தமாக தயாரித்த போலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு அதிமுக கவுன்சிலர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக விநியோகம் செய்துள்ள திடுக்கிடும்  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் உள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் என்பவர்  தனது மூன்று லாரிகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் இயக்கி வருகிறார். டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றி அவருடைய லாரிகள் செல்லும் போது இடையில் மாந்தோப்பில் நிறுத்தி டாஸ்மாக் மதுபானத்தை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலி மதுபானங்கள் கொண்ட பாட்டில்களை லாரியில் ஏற்றி கடைகளுக்கு அனுப்பி மோசடி  செய்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

tasmac fake 1

இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்ததும் அந்த கிராமத்தினுள் அதிரடியாக நுழைந்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது மாந்தோப்பில் இயங்கிவந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த காவல்துறையினர், மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். ஆனால் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் கடந்த மூன்று வருடங்களாக கவுன்சிலர் மணிகண்டன் இந்த மோசடியை செய்து இதுவரை கோடிக்கணக்கில் லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply