முகவரி இல்லாதவர் மு.க.ஸ்டாலின். அழகிரி விமர்சனம்

Alagiri-Stalinதி.மு.க.வினர் திருந்தினால் மீண்டும் அக்கட்சியில் சேருவது குறித்து ஆலோசனை செய்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமாகிய மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது.

எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்” என்றார்.

மு.க.ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, ”ஸ்டாலின் ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது, முகவரி இல்லாத ஸ்டாலினை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை” என்றார்

Leave a Reply