2015ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. வரும் 25-ம் தேதிக்குள் புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சென்னை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள்:
சென்னை மாவட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 38,34,388 வாக்காளர்களில் ஆண்கள் 19,11,714 பேர் , பெண்கள் 19,21,905 பேர், மூன்றாம் பாலினத்தவர் 769 பேர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியில் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 17,66,336 வாக்காளர்களில் ஆண்கள் 8,78,967 பேர் , பெண்கள் 8,87,296 பேர், மூன்றாம் பாலினத்தவர் 73 பேர் என ஈரோடு ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 27,29,548 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களில் ஆண்கள் 13,76,720 பேர், பெண்கள் 13,52,603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 225 பேர் என சேலம் ஆட்சியர் மகர பூஷணம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 29,74, 512 புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 14,87,491 பேர், பெண்கள் 14,87,018 பேர். மூன்றாம் பாலினத்தவர் 53 பேர் என பட்டியல் வெளியிடப்பட்டது.