ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. சுப்பிரமணிய சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை.

swamyமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது வாதம் இன்று இரண்டாவது நாளாக கர்நாடகா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதாட அனுமதி கேட்டார். ஆனால் நீதிபதி குமாரசாமி சுப்பிரமணியசுவாமிக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் வாதம் செய்ய தனக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன்சுவாமி இன்று  மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக ஐகோர்ட்டை மீண்டும் அணுகி அனுமதி பெறுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு அறிவுரை வழங்கியது. இதனால் சுப்பிரமணிய சுவாமி ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ள அனுமதி கேட்டபோது கர்நாடக ஐகோர்ட் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply