10 ரூபாயில் LED விளக்கு. பிரதமரின் புதிய திட்டம் அமல்.

 LEDடெல்லியில் மின்சார பயன்பாட்டின் அளவை குறைக்கும் பொருட்டு வீடுகளுக்கு 10 ரூபாயில் LED விளக்கு வழங்கும் திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

தெருக்கள் மற்றும் வீடுகளில் LED விளக்குகளை பயன்படுத்தும் தேசிய திட்டம் ஒன்றை நேற்று பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியபோது “LED விளக்கு பிரகாசத்தை நோக்கி செல்லும் பாதை. மின்சாரம் உற்பத்தி செய்வதை விட அதை சேமிப்பது மிகவும் கடினமானது. தேசிய அளவிலான புதிய திட்டம் மூலமே நாட்டின் மின்சார செலவு குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றார்.

டெல்லியில் வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக LED பல்ப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.130 விலையுள்ள இந்த விளக்கை ரூ.10 மட்டும் செலுத்தி விட்டு மீதி ரூ.120-ஐ மாதந்தோறும் ரூ.10 வீதம் 12 மாதங்களில் மின்சார கட்டணத்துடன் சேர்த்து செலுத்தலாம்.

சந்தை மதிப்பில் இந்த விளக்கின் விலை ரூ.350 முதல் ரூ.600 வரை இருக்கும் நிலையில் டெல்லி மாநில அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரூ.130-க்கு பொதுமக்களுக்கு வழங்குகிறது. மேலும்  இந்த திட்டத்தை நாடு முழுவதும் 100 நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் LED விளக்குகள் பொருத்தப்படவுள்ளது.

எல்.இ.டி. விளக்குகள் சாதாரண விளக்குகளை விட 50 மடங்கு அதிகம் உழைக்கக் கூடியது மட்டுமின்றி அதிக வெளிச்சம் தருகிறது. மேலும் இந்த விளக்குகளுக்கு குறைந்த அளவு மின்சாரம் போதுமானது. இதனால் மின்கட்டணமும் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.  டெல்லி மக்கள் வீட்டு உபயோகத்துக்கான எல்.இ.டி. விளக்குகளை பெறுவதற்கு, இணைய தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

Leave a Reply