இன்றைய உலகில் நம்மில் நிறைய நபர்களுக்கு தலைவலி பிரச்னை இருக்கிறது . சிலர் மருத்தவரின் ஆலோசனை பெறாமலே
மருந்து உட்கொள்கிறார்கள் .அது மிக ஆபத்தான விசையம் அந்த தவறை நீங்கள் செய்யாதிர்கள் .தலைவலி என்று கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட கூடாது .அது உங்களுக்கு பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் அதற்க்கு நீங்கள் கீழே உள்ள மருத்துவ குறிப்புகளை பயன்படுதாலம் அது எந்த வித பக்கவிளைவும் இல்லாதது .
1.முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
2. 200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு இந்த கலவைகளை தினமும் குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
3.வெள்ளை எள்ளை எடுத்து அதை எருமைப் பால் விட்டு நன்கு அரைத்து சூரிய உதயத்திற்கு முன் தலையில் பற்றுப் போட்டு பின் சூரிய ஒளியில் காட்டினால் ஒற்றைத் தலைவலி குறையும். மிளகாயை நீரிலிட்டு நன்கு காய்ச்சி இறக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி , மிளகை பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து,அந்த விழுதையும் அதனுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி அதை காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
4.எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
5.பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி, வால்மிளகு, கோஷ்டம் மிளகு, செண்பகப்பூ, அதிமதுரம், தேவதாரம், ஜாதிக்காய், வெட்டிவேர், சந்தனம், அரத்தை இவைகளை எல்லாம் சிறிதளவு எடுத்து தட்டி போட்டு, சிற்றாமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சமஅளவு விட்டு சிவக்க காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குறையும்.
6.அதிமதுரம், சோம்பு இவற்றை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்.
7.சிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்து வர குறையும்.
8.இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
8.மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
9.செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.
10எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
11.நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.