அமிதாப்பச்சன், தனுஷ், நடித்த ‘ஷமிதாப்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த படத்தின் நாயகியும் கமல்ஹாசனின் இரண்டாவது மகளுமாகிய அக்ஷரா ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார். அக்ஷரா ஹாசன் இந்த விழாவில் மிகவும் கவர்ச்சியான உடையில் வந்ததால் விழாக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விழாவின் புகைப்படங்கள் இன்று அனைத்து பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. அக்ஷரா ஹாசனின் ஆபாச உடையுடன் உள்ள புகைப்படம் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த புகைப்படங்களை பார்த்த மும்பை மகளிர் அமைப்பு ஒன்று அக்ஷ்ராஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது அக்ஷரா ஹாசனின் முதல் படம் என்பதால் இந்த விஷயத்தை பெரிது படுத்த விரும்பவில்லை என்றும், இனிமேல் அக்ஷரா ஹாசன் பொதுவிழாவிற்கு வரும்போது நாகரீகமான உடையை அணிந்து வர வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள அந்த பெண்கள் அமைப்பு மீண்டும் ஒருமுறை இதே தவறை செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் அக்ஷ்ராஹாசன் உள்பட கமல் குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.