இத்தாலி நிறுவனத்தின் குறைந்த விலை செல்போன் அறிமுகம். விலை ரூ.3.8 லட்சம்

88-Tauri-designed-Tonino-Lamborghini-coming-soon-review-mainஇத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி என்ற நிறுவனம் விலை உயர்ந்த செல்போன்களை மட்டுமே தயாரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது  இந்த நிறுவனம் மிகவும் விலையுயர்ந்தபுதிய செல்போன் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த செல்போனின் விலை 6 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய பணத்தில் இதன் விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

டோனியோ லம்போர்கினி என்று பெயரில் அமைந்துள்ள இந்த செல்போனின் வெளிப்புறப்பகுதி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் லெதர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 அங்குல எச்.டி. திரை கொண்டது. 20 மெகா பிக்சல் கேமராவும் இதில் உள்ளது.

கருப்பு, தங்க நிறம், வெள்ளி உள்பட மொத்தம் 5 நிறங்களில் இந்த செல்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மிக அதிக விலையுள்ள செல்போன்களை மட்டுமே தயாரித்து வரும் இந்த நிறுவனத்தின் குறைந்த விலை செல்பொன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளவற்றில் விலை குறைந்த போன் இது என்பதால் இதற்கான தேவை அதிகம் இருக்கும். எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த செல்போன்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply