நடுவானில் திடீரென பழுதான விமானம். 1000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த பயணிகள்.

plane 1  நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று 13 பேர்களுடன் வானில் பறந்து கொண்டிருந்தது .இந்நிலையில் திடீரென விமானத்தின் எஞ்சின் பகுதியில் பழுது ஏற்பட்டதால் விமானம் தரையை நோக்கி மிக வேகமாக இறங்கியது.

planeplane

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஸ்கைடைவ் போன்ற பாதுகாப்பான உடைகளை அணிந்து விமானத்தில் இருந்து குதித்தனர். விமானம் அந்த சமயத்தில் கடலின் மேல் பறந்து கொண்டிருந்ததால் சுமார் 1000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த அனைவரும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

plane 2

நியூசிலாந்து நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரி மைக் ரிச்சர்ட்ஸ் அவர்கள் இதுகுறித்ஹ்டு கூறும்பொது, ‘விமானத்தில் இருந்த 13 பேர்களும் எவ்வித சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்த சம்பவம் உண்மையில் அதிசயமானது என்றும் அவர்கள் அனைவரும் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்றும் கூறினார்.

13 பேர்களும் விமானத்தில் இருந்து கீழே குதித்த சில நிமிடங்களில் அவர்கள் சென்ற விமானம் கடலில் விழுந்து மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply