வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 29ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டதால் பெரிய படங்களின் போட்டியின்றி ‘ஐ’ படம் வெளியாகும் என்று இருந்த நிலையில் திடீரென ‘ஐ’ படத்தின் ரிலீஸுக்கும் தடங்கல் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையை சேர்ந்த ஹைப்பர்பீஸ் என்ற நிறுவனம் ‘ஐ’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ரூ.10 கோடிக்கு சில நாட்களுக்கு முன் ஒப்பந்தம் செய்தது. இதில் ரூ.5 கோடியை முன்பணமாக கொடுத்துவிட்டு மீதியை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துவதாக கூறியிருந்தது.
ஆனால் மீதிப்பணம் இந்த நிறுவனத்தின் லண்டன் கிளையில் இருந்து ஆஸ்கார் நிறுவனத்திற்கு டிரான்ஸ்பர் செய்வதில் வங்கிகள் ஏற்படுத்திய காலதாமதம் காரணமாக ஒப்பந்தத்தை ஆஸ்கார் நிறுவனம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹைப்பர்பீஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் அதிர்ச்சி தரும் தகவல்கள் பரவி வருகின்றது.
ஆனால் ‘ஐ’ படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். ஓவர்சீஸ் விவகாரங்கள் குறித்த அனைத்து பிரச்சனைகளும் முன்பே சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், ‘ஐ’ படம் பொங்கல் தினத்தில் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.