2ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. பெங்களூர் ஆசிரியருக்கு தர்ம அடி.

teacher.பெங்களூருவில் 2வது வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த உடற்கல்வி ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அடித்து உதைத்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரின் ஒருசில பகுதிகளில் இதன்காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 32 வயது உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வரும் கிருஷ்ணா என்பவர் அதே பள்ளியில் 2வது வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறியதால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று காலை ப‌ள்ளியை சூழ்ந்துகொண்டு ஆசிரியர் கிருஷ்ணாவை கைது செய்ய போராட்டம் நடத்தினர். அப்போது, மேலும் சில மாணவிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும்,பொதுமக்களும் பள்ளி முன்பு குவிந்தனர்.

இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விரைந்து வந்து ஆசிரியர்  கிருஷ்ணாவை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களில் சிலர் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்க தொடங்கினர். ஆசிரியர் கிருஷ்ணாவின் சட்டை கிழிந்து மண்டை உடைந்தது. நிலைமை விபரீதமாக போவதை அறிந்த போலீஸார் தடியடி நடத்தினர்.

இதனால் பொதுமக்களின் ஆத்திரம் மேலும் பன்மடங்கு அதிகரித்தது. இதனால் பொது மக்கள் போலீஸாரையும் தாக்க தொடங்கினர். பள்ளி, பள்ளி வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் ஆகியவை தாக்கப்பட்டதோடு ஒருசில வாகனங்கள் தீயிட்டும் கொளுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி “மக்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறினார்.  இந்த சம்பவத்தின் காரணமாக பெங்களூருவின்  பேட்டராயனப்புரா, ஹொசாகுட்டஹள்ளி ஆகிய இடங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Leave a Reply