ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால விதித்ததால் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ ஆகிய இரண்டு முக்கிய படங்களுமே பொங்கல் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் மேலும் சில படங்கள் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்ஆம்பள படத்திற்கு இன்னும் அதிக தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ‘ஐ’ படத்திற்கு புக் ஆன தியேட்டர்களில் பெரும்பாலனவை ஆம்பள படத்தை புக் செய்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஐ’ படத்திற்கு பயந்துதான் ‘என்னை அறிந்தால்’ பட ரிலீஸ் தேதி தள்ளிப்போனது என ஃபேஸ்புக், டுவிட்டரில் அஜீத்தை கலாய்த்தவர்கள் தற்போது கப்சிப் என ஆகியுள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் பக்கமே வருவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜீத்தை கலாய்த்தவர்களுக்கு ஆண்டவனே ஆப்பு வைத்துவிட்டார் என்றும், பட்டாசும் சும்மா கொளுத்தாமலே வெடித்துவிட்டது என்றும்அஜீத் ரசிகர்கள் சரமாரியாக டுவிட் செய்து டுவிட்டரை துவம்சம் செய்து வருகின்றனர். ஏற்கனவே டுவிட்டரில் அஜீத் ரசிகர்களின் சாம்ராஜ்யம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.