செல்ஃபி எடுக்க சொல்லித் தருகிறார்கள்!

selphy 500 2(1)

விதவிதமா செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்-ஆப் என்று  அப்லோட் செய்து லைக்ஸ் வாங் குபவர்களுக்கு  புரொபஷனலாக செல்ஃபியை எப்படி எடுப்பது? என சொல்லி கொடுக்க வருகிறது லண்டனில் இயங்கி வரும் சிட்டி லிட் கல்லூரி.

உலகிலேயே முதன்முதலாக செல்ஃபிக்கு என்று தனி கோர்ஸ் துவங்கும் கல்லூரி என்ற பெயரை தட்டிச் செல் கிறது இந்த நிறுவனம். வரும் மார்ச் மாதம் முதல் செல்ஃபி கிளாஸ் லண்டனில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த போடோகிராபி பாடப் பிரிவிற்கு “சுய உருவ ஓவியத்தின் புகைப்படக் கலை“ என பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது “ The art of self portraiture” . இதற்கான கட்டணமாக மாணவர்களிடமிருந்து 132 டாலர் முதல் 200 டாலர் வரை பெறப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனது மாணவர்களுக்கென இந்த கோர்ஸை பிரத்யேகமாக தொடங்க உள்ள சிட்டி லிட் கல்லூரி, இந்த வகுப் பின் மூலம் மாணவர்கள் ‘‘செல்ஃபி எடுக்க முழுமையாகக்  கற்றுக்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளது.

செல்ஃபி எடுக்க ஏற்ற இடம், தேவையான வெளிச்சம், காலநிலை உள்ளிட்ட விஷயங்களோடு தொழில்நுட்பம் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும். அதுமட்டுமில்லாமல் செல்ஃபி குறித்த விரிவுரைகள், கருத்தரங் குகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழு வேலைபாடு போன்றவற்றிலும் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது.

பயிற்சியில் சேர  போட்டோகிராபி பற்றிய அடிப்படை அறிவும், எஸ்.எல்.ஆர். கேமிரா இருந்தாலே போதும். இது தவிர்த்து, சிறந்த புகைப்படம் எடுப்பதற்கான புதுப்புது தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும் எனவும் லண்டன் சிட்டி லிட் கல்லூரி தெரிவித்திருக்கிறது.

செல்பி பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்….இனி அவர்கள் இது தாங்கள் எடுத்த செல்ஃபிதானா என தங் களை தாங்களே கிள்ளிப் பார்க்கக் கூடிய அளவு லைக்குகளை தங்கள் வலைதளங்களில் அள்ளப் போகிறார்கள்.

Leave a Reply