குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் இன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தை முடித்துவிட்டு மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டோடு மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி 100 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, இவ்வருடம் இந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட குஜராத் மாநில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று நடைபெற உள்ள இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பான் கீ மூன் கலந்து கொள்கிறார்.