ஆவாரை செடியின் மருத்துவ குணங்கள்

2e44bf55-53ea-49af-b385-9effa23244e6_S_secvpf

ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும் எரிச்சலையும் போக்கக்கூடியது.

ஆவாரம்பட்டை வற்றச் செய்வது மற்றும் ஒரு ஊட்டச்சத்துள்ள மருந்துப் பொருளாகும் ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகும்.

ஆவாரையைப் பொதுவாக சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகவும், கண்ணோய்களுக்கும், பொருத்துகள் மற்றும் தசைகளின் வலியைப் போக்குதற்கும், மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், மஞ்சள்காமாலையை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைப் போக்குவதற்கும், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் துன்பங்களைத் துடைப்பதற்கும் மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

‘ ஆவாரை தசை நரம்பை சுருக்கும் தன்மையுடையது. விதைகள் காம உணர்வைத் தூண்டக் கூடியது. தோலின் துர்நாற்றத்தைப் போக்கி நல்ல பொற்சாயலையும் தரவல்லது. ஆவாரம் பூக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய்க்கே உரித்தான மலச்சிக்கலையும் மாற்றும் குணம் ஆவாரம் பூவுக்கு உண்டு.

வயிற்றுப் பூச்சிகளை வேரறுக்க வல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. எவ்வித வீக்கத்தையும் கரைக்கக் கூடியது. நுண்கிருமிகளைப் போக்க வல்லது. சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தரக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரோடு விந்து வெளியாவது குணமாகும். ஆவாரையில் “சென்னா பிக்ரின்” எனப்படும் “கார்டியாக் குளூகோசைட் மற்றும் “ஆன்த்ரா குனைன்ஸ்”, “டேனின்ஸ்” ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.

பல்வேறு நோய்களுக்கும் காரணமான “ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்”, “என்டரோ காக்கஸ் “பீக்காலிஸ்”, “பேச்சிலஸ் சப்டிலிஸ்”. என்டரோ சாக்கஸ் “பீக்காலிஸ்”, “பேச்சிலஸ் சப்டிலிஸ்”, “சால்மோனில்லா டைப்பி”, “சால்மோனில்லா டைபி”, “சால் மோனில்லா பேரா டைப்பி”, “விப்ரியோ காலரே”, “சைஜில்லா டிசன்ட்ரோ” போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.

இன்றைய நவநாகரீக உலகில் மகப்பேறு இன்மை என்கிற பிரச்சினை பரவலாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனால் மிக்க பொருட் செலவு, உடல் துன்பமும், ஏமாற்றமும் கூட ஏற்படுகிறது. மகப்பேறு இன்மைக்கு முக்கிய காரணங்கள் இரண்டு எனச் சொல்லலாம். ஒன்று விந்தணுக்கள் குறைபாடு மற்றும் அணுக்களின் பயணத்தன்மையில் குறைபாடு (ஸ்பெர்ம் கவுண்ட் மற்றும் ஸ்பெர்ம் மோடிலிடி) இரண்டாவது இயலாமை (இம்பொட்டன்ஸி), ஆண் அல்லது பெண்களின் உணர்வின்மை ஆகியவையே இந்த குறைகளை போக்கும் வல்லமை ஆவாரையில் உள்ளது.

• ஆவாரம்பட்டையை எடுத்து உலர்த்திப் பொடித்து 20கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி என இருவேளை குடித்துவர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு ஆகியன தீரும்.

• ஆவாரைப் பஞ்சகம் சூரணம் வெந்நீருடன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட மதுமேகம் என்கிற நீரிழிவு உடல் மெலிவு, உடலில் ஏற்படும் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகின குணமாகும்.

• ஆவாரம் பூக்களை புதிதாகக் கொண்டு வந்து கூட்டாக செய்து உணவுக்கு பயன்படுத்துவதாலோ அல்லது உலர்த்தி சூரணித்து தேநீர் போலக் காய்ச்சி சாப்பிடுவதாலோ உடலின் சூடு, உடலின் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதோடு உடலுக்கு பலத்தை தரும். நோய்களைத் தணிக்கும் உடலுக்கு பொன்னிறத்தை தரும்.

• ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும்.

• ஆவாரம் பூவை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நீரில் போட்டு வைத்திருந்து காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வருவதால் தோலுக்கு ஏற்பட்ட சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்.

• ஆவாரைப் பிசின் (இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

• ஆவாரை இலையை நெய்யில் விட்டு வதக்கி ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்க கண் நோய்கள் குணமாகும் கண்களில் அழுக்கு வெளிப்பட்டு புளிச்சவாடை வருதல், கண்சிவப்பு, கண் எரிச்சல் ஆகியனவும் குணமாகும்.

• தோல் வறட்சி ஏற்பட்ட போது ஆவாரைப்பட்டை, மஞ்சள் சிறிது கற்பூரம் ஆகியவற்றை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உடல் முழுவதும் தேய்த்து வைத்திருந்து பின்னர் குளிக்க தோல் வறட்சி நீங்கி மென்மையும் நல்ல நிறமும் பெறும்.

• ஆவாரைப் பஞ்சகத்தை இலை, பூ, பட்டை காய், வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு தினம் 3 வேளை உள்ளுக்கு சாப்பிட சோர்வு, மந்தநிலை மறைந்து சுறுசுறுப்பும் வீரியமும் உண்டாகும்.

எங்கு பார்த்தாலும் கிடைக்கும் ஆவாரை இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்.

Leave a Reply