சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரு பாம்பின் இரண்டு விஷ பற்கள். திருமாவளவன்

rajapakse and srisenaஇலங்கையில் புதிய அரசு ஏற்பட்டிருந்தாலும், தமிழ மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடும் என்று தாங்கள் நம்பவில்லை என்றும், புதிய அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கடலூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  திருமாவளவன் ”முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு, நாம் பொங்கல் கொண்டாடுவது இல்லை. யாருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் இல்லை. ஆனால், இந்த ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்த பிறகு, பொங்கல் பண்டிகை வருவதால் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களும், சிங்களர்களும் சேர்ந்தே ராஜபக்சேவை தோற்கடித்து இருக்கிறார்கள். இது நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. இது அவருக்கு முதல் கட்ட தண்டனை தான். அடுத்த கட்ட தண்டனை சட்ட வடிவில் காத்திருக்கிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஒரு பாம்பின் இரண்டு விஷபற்கள் போன்றவர்கள். அதனால், சிறிசேனாவால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடும் என்று நாங்கள் நம்பவில்லை.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a Reply