20 ஓவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ரன்களை சேஸ் செய்து மேற்கிந்திய தீவுகள் அணி உலக சாதனை செய்துள்ளது. நேற்று தென்னாப்பாரிக்காவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி 232 ரன்கள் என்ற இலக்கை 19.2 ஓவர்களில் எடுத்து உலக சாதனை செய்தது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு கோரியது. தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது. டீ பிளஸ்ஸிஸ் 119 ரன்களும், மில்லர் 47 ரன்களும் குவித்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ்ட் கெய்ல் 41 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார். சாமுவேல் 39 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். எனவே மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து உலக சாதனை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. கெய்ல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.