தேமுதிக சார்பில் விஜயகாந்த்தின் தொகுதியான ரிஷிவந்தியத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்த், தன் மனைவியுடன் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய பிரேமலதா, ‘கேப்டனுடன் 24 மணி நேரமும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நான், உங்களுக்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். குடிப்பவர்களுக்கு லிவர் பாதிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். கேப்டனை பற்றி இப்படி அவதூராக கூறுகிறவர்கள் டாக்டரிடம் வாருங்கள், கேப்டனும் வருவார். கேப்டனின் லிவரில் ஒரு சதவீதம் பாதிப்படைந்துள்ளது என்று டாக்டர் கூறினால் உங்கள் முன் நான் தலை வணங்குகிறேன். எத்தனை டாக்டரை வேண்டும் என்றாலும் கூட்டி வாருங்கள், இது ஒரு ஓப்பன் சேலஞ்ச். இதை பற்றி நான் யாரிடமும் பகிர்ந்துக் கொண்டது கிடையாது, முதல் முறையாக உங்களிடம் சேலஞ்ச் வைக்கிறேன்” என்று சவால்விட்டார்.
இதற்கு பின்னர் பேசிய தேதிமுக தலைவர் விஜயகாந்த், “என் மனைவி கூறியது போல எந்த நேரத்திற்கும் மருத்துவ பரிசோதனைக்கு வர நான் தயார். என்னை குடிகாரர்கள் என்று கூறியவர்கள் நான் குடிப்பதை டி.வியில் காட்ட வேண்டியது தானே. ராத்திரி பகலாக நடித்ததால் என் கண்கள் சிவந்துவிட்டது. இது தெரியாமல் நான் குடிக்கிறேன் என்கிறார்கள். இப்படி சொல்லி சொல்லியே குடிக்காத என்னை குடிகாரன் ஆக்கிவிடுவார்கள் போல.
விஜயகாந்த் தன்னை குடிகாரர் இல்லை என்று கூறியதை கேட்டவுடன் பல ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளிகள் கிண்டலும், கேலியுமாக நூற்றுக்கணக்கான பதிவுகளை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.