சாமியார் நித்தியானந்தா முழு ஆண்மை படைத்தவர். பரிசோதனை அறிக்கையில் தகவல்.

nithyanandaசர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் நித்தியானந்தா முழு ஆண்மை உள்ளவர்தான் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யை ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் புகாரில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ஆம்தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் அவரது சீடர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

 நேற்று நீதிமன்றம் தொடங்கியவுடன் கர்நாடக சிஐடி போலீஸார் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை சீல் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.. அதைப் பெற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, “இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதத்தை வரும் 27ம் தேதி தொடங்குங்கள். குற்றம் சாட்டப்பட்டவர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்திரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.

ஆண்மை பரிசோதனை அறிக்கை குறித்து கர்நாடக சிஐடி போலீஸார் செய்தியாளர்களிடம் கூறியபோது“நித்யானந்தாவுக்கு 37 வயதான ஆணுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அனைத்து உடல் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது. அவரால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும். அதனால் அவருக்கு ஆண்மை உள்ளவர் என மருத்துவர் குழு சான்று அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply