துக்க வீட்டில் பீர் குடித்த 69 பேர் பரிதாப பலி. மொசம்பியா நாட்டில் பரபரப்பு.

Mozambiqueமொசம்பியா என்ற நாட்டில் துக்க நிகழ்ச்சியில் பரிமாறுவதற்காக தயார்  செய்யப்பட்ட பீர் குடித்து 69 பேர் பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 169 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மொசம்பியா நாட்டின் வழக்கப்படி திருவிழா, இன்பம், துன்பம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களாகவே பீர் தயாரித்து அந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு பரிமாறுவது வழக்கம். இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டதை அடுத்து அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு பீர் தயாரித்து கொடுத்துள்ளனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட பீர் எதிர்பாராதவிதமாக விஷமாக மாறியதால் பீர் குடித்த அனைவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் 69 பேர் பலியாகிவிட்டதாகவும், மேலும் 169 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த மொசம்பியா நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply