அமெரிக்க ராணுவத்தின் டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டதாகவும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு திடீரென அமெரிக்க ராணுவத்தின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அந்த பக்கத்தில் “அமெரிக்க வீரர்களே, நாங்கள் வருகிறோம். பின்னால் திரும்பிப் பாருங்கள் – ஐஎஸ்ஐஎஸ்” என்று தீவிரவாதிகள் பதிவிட்டுள்ளதால் அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை செய்து வருகிறது.