பாரதிய ஜனதாவில் கிரண்பேடி இணைந்ததால் ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியா?

kiran bediமுன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால், பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஆர்.எஸ்.எஸ் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று ஆர்.எஸ்.எஸ். தலைமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்,  கிரண்பேடி பாஜகவில் சேர்ந்த விஷயத்தில் தங்களுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், சமூக சேவையாளர் அன்னா ஹசாரே அவர்களின் வலது கையாகவும் இருந்த கிரண்பேடி அதன்பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியில் இணைந்து டெல்லி அரசியலில் களம் புகுந்தார் கிரண்பேடி. தற்போது ஆம் ஆத்மியில் இருந்து விலகி அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

கிரண் பேடி பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிரண் பேடிக்கு பா.ஜ.க. அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தியை நிராகரித்துள்ள ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் தலைவர் மன்மோகன் வைத்யா நேற்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கிரண் பேடி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதால் மோகன் பாகவத் அதிருப்தி அடைந்துள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையே விரிசல் ஏற்படுத்துவதற்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply