தமிழகத்தில் அடாவடித்தனத்துடன் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. மேனகா காந்தி

menaka gandhiஜல்லிக்கட்டு விளையாட்டால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேரிடுவதால்தான் பாஜக அதை எதிர்க்கிறது” என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு எதிரான் கருத்தை நேற்று வெளியிட்டிருக்கிறார்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, அங்கு நடந்த ஒரு விழாவில் பேசும்போது, “அறுவடைத் திருநாள் என்பது மக்களுக்கு உணவளித்த மரங்களுக்கும், செடிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அடாவடித்தனத்துடன் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. இது மிகவும் தவறானது.

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு மேற்கத்திய கருத்தாக்கம். இதனால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேர்கிறது. எனவே பாஜக ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாடுகளும், காளைகளும் மனிதர்களுக்கு உதவியாகவே இருக்கின்றன. அவற்றை விளையாட்டு என்ற போர்வையில் துன்புறுத்தக்துவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply