கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறி பெரும் பரபரப்பை பாரதிய ஜனதா கட்சியின் எம்.,பி. ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆந்திராவில் திருமணமானவர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் 18 ஆவது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியபோது, “ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது மக்கள் தொகையைப் பெருக்குங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று படித்தவர்கள் பலர் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவது இல்லை. இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் சிசு மரணம் நிகழ்கிறது. இதனால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜப்பானை எடுத்துக்கொண்டால் அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இங்கும் அந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டாம். அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளின் படிப்பை மட்டும் பெற்றோர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பை எனது அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும்’ என்று கூறினார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/17YapES” standard=”http://www.youtube.com/v/DUjIKknjxhY?fs=1″ vars=”ytid=DUjIKknjxhY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3117″ /]