59 பந்துகளில் 149 ரன்கள். தென்னாப்பிரிக்க வீரர் உலக சாதனை.

devilliersதென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்து  தென்னாப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் என்ற வீரர் உலக சாதனை புரிந்துள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் முதல் மூன்று வீரர்கள் சதமடித்து சாதனை படைத்தனர். ஒரு இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறை. ஆம்லா 153 ரன்களும், ரூசவ் 128 ரன்களும், டிவில்லியர்ஸ் 149 ரன்களும் அடித்தனர். இதில் டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் 31 பந்துகளில் சதமடித்து உலகின் மிக அதிவேக சதம் என்ற சாதனையை  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 439 ரன்கள் எடுத்தது.

பின்னர் 440 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 64 ரன்களும், ராம்தின் 57 ரன்களும் எடுத்தனர்.

Leave a Reply