ஜெயலலிதா-அருண்ஜெட்லி சந்திப்பு ஏன்? பரபரப்பு பின்னணி.

jaya1(83)மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அருண் ஜெட்லி தரப்பு கூறினாலும், இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாஜக என்னதான் மக்களவையில் மெஜாரிட்டி பெற்றிருந்தாலும், மாநிலங்களவையில் எந்த ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானாலும் அதிமுக உள்பட ஒருசில கட்சிகளின் ஆதரவு தேவை. தற்போது மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும், மக்களவையில் 37 உறுப்பினர்களையும் கொண்டுள்ள அதிமுகவின் தயவு இருந்தால் மசோத்தாக்கள் எளிதில் நிறைவேறிவிடும்.

அதே நேரத்தில் வருமான வரி வழக்கில் அபராதம் கட்டி தப்பித்தது போல் சொத்துக்குவிப்பு வழக்கிலும் பாஜகவின் தயவு தேவைப்படும் என்று ஜெயலலிதா தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.  எனவே இந்த சந்திப்புக்கு இவைகள்தான் காரணமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றன.

Leave a Reply