காந்தியை அவமதித்த அமெரிக்காவுக்கு செருப்பு மரியாதை? தமிழக வழக்கறிஞர் ஏற்பாடு

gandhiஅமெரிக்காவை சேர்ந்த ப்ரூவிங் என்ற பீர் நிறுவனம் காந்தியின் புகைப்படத்தை தனது புதிய வகை பீர் பாட்டிலில் வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனங்கள் கிளம்பியது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காந்தியின் புகைப்படத்தை பீர் பாட்டிலில் பயன்படுத்தியதற்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துக்கொண்டாலும், இன்னும் அந்த புகைப்படங்கள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க தமிழகத்தில் உள்ள தமிழர் ஒருவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி மற்றும் அமெரிக்காவின் தந்தை என்று போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் கூடிய செருப்பை தயாரித்துள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராமசுப்பிரமணியம்.

இதுகுறித்து கே.ராமசுப்பிரமணியம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:’

“நம் நாட்டின் தந்தை காந்தியடிகளை அவமானப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று காந்தி படத்துடன் கூடிய பீர் பாட்டிலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, யாரையும் புண்படுத்த இப்படி செய்யவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதன் பின்னரும் காந்தியடிகளின் படத்தை பீர் பாட்டிலில் இருந்து அகற்றவில்லை. இது சம்பந்தமாக ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவரை இந்தியா கொண்டு வர நிறைய சட்ட நடைமுறைகள் உள்ளது. அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது.

அதனால் இதனை எப்படி எதிர்கொள்வதுனு யோசிச்சேன். அப்போதான் இந்த ஐடியா வந்துச்சு. நம் நாட்டுல காந்தி மாதிரி, அவங்க நாட்டுல ஜார்ஜ் வாஷிங்டன் மதிக்க கூடிய நபர். முதல் ஜனாதிபதியும் அவர்தான். காந்தி பெயர்ல, அவர் படத்தை போட்டு பீர் டின் கொண்டு வந்ததுக்கு பதிலடியா, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில் செருப்பு தயாரிச்சா என்னான்னு தோணுச்சு.

இது சம்பந்தமா 5, 6 கம்பெனியை அணுகினேன். ஆனா யாரும் முன் வரலை. ஒரு நிறுவனம் மட்டும் எங்க பேரை வெளியில சொல்லலைனா, தயாரிச்சு தர்றதா சொன்னாங்க. அதுக்கு சரினு சொன்னதால, அந்த நிறுவனத்துல இப்போ செருப்பு தயாராகிக்கிட்டு இருக்கு. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தயாராகி விடும். அமெரிக்க அதிபர், துணை அதிபர், ஸ்பீக்கர்கள், 50 மாகாண கவர்னர், இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இந்த செருப்புகளை இந்த வார கடைசியில அனுப்பி வைப்போம்.

இதுமட்டுமில்லாமல் இந்த செருப்பை பெரிய வடிவத்தில் தயாரிச்சு, ஒபாமா இந்தியா வர்ற 26ஆம் தேதி டெல்லியில் இருக்குற அமெரிக்க தூதரகத்தின் முன்னாடி வைக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்கேன்” என்று கூறினார்.

Leave a Reply