சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு. சசிதரூரிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை

sasitharoorமுன்னாள் மத்திய அமைச்சர் சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சசி தரூரிடம் ஒருகட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சுனந்தா வழக்கு தொடர்பாக இதுவரை பலகட்ட விசாரணை முடிந்துள்ளது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில் நேற்றிரவு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் இரண்டாவது கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக உறுதி செய்துள்ளனர். எனவே சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில் நேற்று சசிதரூரிடம் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைக்காக நேற்று கேரளாவில் இருந்து டெல்லி வந்த சசி தரூர், முதலில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தெற்கு டெல்லியில் உள்ள வசந்த விஹார் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அங்கு, துணை ஆணையர் பிரேம்நாத், கூடுதல் துணை ஆணையர் குஷ்வாஷ், முதுநிலை இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங், விசாரணை அதிகாரி விகேபிஎஸ் யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணை விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

Leave a Reply