சென்னை புத்தகக்கண்காட்சி 2015. இன்று நிறைவடைகிறது.

bookசென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி. சென்னை YMCA கல்லூரியில் கடந்த 9ஆம் தேதி ஆரம்பமான புத்தகக்கண்காட்சியில் சுமார் 700 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

சென்னை மற்றும் தமிழக, இந்திய முக்கிய பதிப்பகங்கள் தங்கள் பதிப்பில் உருவான புத்தகங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உடல்நலம், கவிதைகள், குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், கதைகள், நாவல்கள், திரைப்பட சம்பந்தப்பட்ட புத்தகங்கள், ஆராய்ச்சி புத்தகங்கள் என பல்வேறு பிரிவுகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்களை சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்து ஏராளமான புத்தக ஆர்வலர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்றனர். இந்நிலையில் இந்த புத்தகக்கண்காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால் இதுவரை செல்லாதவர்கள் இன்று  இந்த புத்தக்கண்காட்சிக்கு சென்று பயனடையுமாறு சென்னை டுடே நியூஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply