இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரிப்பு.

tigerஇந்தியாவில் கடந்த ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டு 1,706 புலிகள் மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாக உள்ளது.

இந்தியாவில் புலிகளை தற்போது யாரும் வேட்டையாடுவதில்லை என்றும், இந்திய சீதோஷ்ண நிலை புலிகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக இருப்பதும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 1947ஆம் ஆண்டி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40,000ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவித்கர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply