கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து சந்தானம் காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து ஹீரோ வேடங்களில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-தமன்னா நடிக்கும் படத்தில் ஆர்யாவுக்கு நண்பராக ஹிரோவுக்கு இணையான கேரக்டர் என்பதாலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் சந்தானம் நடித்துள்ளதாலும் இந்த ஒரு படத்தில் மட்டும் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இனிமேல் காமெடி வேடங்களை வெகுவாக குறைத்துவிட்டு, ஹீரோவாக வலம் வர சந்தானம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கதாநாயகனாக நடித்த சந்தானம் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தில் அவருக்கு ஜோடிகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுமுகங்கள் அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர்கள் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கவுள்ளது.