13 வயதில் தொழிலதிபராக மாறிய இந்திய வம்சாவளி சிறுவன்.

  braille-printerகண் தெரியாதவர்கள் படிப்பதற்கு வசதியாக பிரெய்லி முறை மிஷின் ஒன்றை அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுவன் தன்னுடைய சொந்த முயற்சியில் கண்டுபிடித்துள்ளான். அந்த மிஷினை தானே சொந்தமாக தயாரிக்கும் தொழிலையும் அவன் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளதால் 13 வயதிலேயே தொழிலதிபர் என்ற நிலையை அந்த சிறுவன் அடைந்துள்ளான். இந்த சிறுவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

braille-printer 1

தற்போதுள்ள பிரெய்லி பிரிண்டர் 9கிலோ எடையில் இருப்பது மட்டுமின்றி அதன் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால் 13வயது சிறுவன் சுபம் பானர்ஜி கண்டுபிடித்துள்ள பிரிண்டர் ஒரு கிலோவுக்கும் கொஞ்சம் அதிகமான எடையை உடையது. இதுமட்டுமின்றி இந்த பிரிண்டர் ரூ.15 ஆயிரம் விலையிலேயே தயாரிக்கும் வகையில் உள்ளது.

braille-printer 3

கண் தெரியாதவர்கள் குறைந்த விலையில் எடை குறைந்த பிரிண்டர் பயன்படுத்தி பயன்பெற என்ற நல்ல நோக்கத்துடன் முயற்சி செய்துள்ள இந்த சிறுவனின் திறமையை உலகெங்கிலும் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.

braille-printer 2

Leave a Reply