அமெரிக்காவில் கார் டிரைவரை கொலை செய்த மான். அதிர்ச்சி தகவல்

deerஅமெரிக்காவில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென குறுக்கே வந்த மான் மீது மோதியதால் எதிரா வந்த மற்றொரு காரின் மீது அந்த மான் விழுந்து அந்த காரின் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் நாண்டிகோக் சாலையின் மேற்கு பகுதியில் இருந்து 67 வயது பெக்கி லீ டிக்கர்சன் என்பவர் தனது காரை மிக வேகமாக ஓட்டி வந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென மான் ஒன்று வந்ததால் அவருடைய கார் மிகவேகமாக மான் மீது மோதியது. இதனால் சில அடிகள் தூரம் தூக்கிவீசப்பட்ட மான், எதிரே வந்த கார் ஒன்றின் கண்ணாடி மீது விழுந்து அந்த காரை ஓட்டிய டிரைவரின் மீது மிக வேகமாக மோதியது.

மானின் கொம்பு எதிரே வந்த காரின் நெஞ்சில் மிக ஆழமாக குத்தியதால் அந்த டிரைவர் பரிதாபமாக பலியானதாக செய்திகள் கூறுகின்றன.மரணமடைந்த நபர்  அமெரிக்காவில் உள்ள குவாண்டிகா என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் அவருடைய வயது 69 என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மேரிலேண்ட் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply