நேற்று திடீரென வாட்ஸ் அப் பயனாளிகள் சிலருக்கு 24மணி நேர தடை விதிக்கப்பட்டதால், வாட்ஸ் அப் பயனாளிகள் பெரும் குழப்பம் அடைந்தனர்.
வாட்ஸ் அப் போலவே வாட்ஸ் அப் பிளஸ் என்ற அப்ளிகேஷன் இணையத்தில் உள்ளது. ஒருசிலர் இதை வாட்ஸ் அப் அப்ளிகேஷன் என நினைத்து பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்திய புதுடில்லி பயனாளிகள் ஒருசிலருக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், ” தேர்ட் பார்ட்டி க்ளையன்ட் ( third-party client) சேவையை பயன்படுத்தியதால் ஆப்ஸ் ( app’s) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதால் அவர்களுக்கு 24 மணி நேர தடையை வாட்ஸ் அப் பிளஸ் விதித்தது.
இந்த திடீர் தடை பயனாளிகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து வாட்ஸ் அப் நிர்வாகத்திற்கு ஏராளமான புகார் சென்றன. இந்த புகார்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் இன்று விளக்கமளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்- ஆல் உருவாக்கப்பட்டதோ அல்லது வாட்ஸ் அப்- ஆல் அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல. வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை உருவாக்கியவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷன் பாதுகாப்பானது என்ற உத்தரவாதத்தை வாட்ஸ் அப்- ஆல் அளிக்க முடியாது. உங்களது தனிப்பட்ட தகவல் நீங்கள் அறியாமலோ அல்லது உங்களது அனுமதி இல்லாமலோ பிறருக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.
எனவே வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள், அதனை நீக்கிவிட்டு, வாட்ஸ் அப்-பின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்றோ அல்லது கூகுள் பிளே மூலமோ வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று கூறியுள்ளது.