மனைவியின் துணிகளை துவைத்து அயன் செய்கிறாரா விஜய்?

washமதராஸபட்டினம், தாண்டவம், சைவம், தலைவா போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய், சமீபத்தில் நடிகை அமலாபாலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் மனைவி அமலாபாலின் துணிகளை விஜய்தான் துவைத்து வருவதாக அமலாபால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல வாஷிங் பவுடர் நிறுவனமான ஏரியல் இந்தியா, ‘துணி துவைப்பது ஆண்களின் வேலையா? அல்லது பெண்களின் வேலையா? என்று நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை அமலா, ‘வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களுடன் இணைந்து செய்ய வேண்டும். எனது வாழ்க்கையில் அதுதான் நடைபெறுகிறது.

என்னுடைய துணிகளை துவைப்பது, அயன் செய்வது உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்திலும் எனது கணவர் விஜய் எனக்கு உறுதுணையாக இருப்பார்’ என்று கூறினார். ஏரியல் இந்தியாவின் தமிழக தூதுவராக நடிகை அமலாபால் செயல்படுகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply