பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதி

balakumaranஉடல் நலக்குறைவு காரணமாக பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (70) சென்னை, மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவர், 250 நாவல்களையும், பல சிறுகதைகளையும் ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

Leave a Reply