2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 6வது தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு 130 பக்கம் கொண்ட தீர்ப்பு நகலை வாசித்து வருகின்றனர்.
இதில் குருநாத மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி என்றும், இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் குருநாத் மெய்யப்பனும், ராஜ் குந்த்ராவும் ஐபிஎல் அணியின் நிர்வாகிகள்தான் என்றும் தீர்ப்பு நகலில் தெரிவித்துள்ளனர்.