தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம். ஜெ. வழக்கு விசாரணையில் திமுகவுக்கு நீதிபதி அறிவுரை.

jayalalithaஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் திமுக வழக்கறிஞர் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் வாதிடும்போது, ‘ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் வருவாய் குறைத்து காண்பிக்கப்பட்டதாகவும், சொத்துக்களின் சந்தை மதிப்பும் தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் வாதம் செய்தார்.

இந்நிலையில் பல வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 9 மாதங்களில் எப்படி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தீர்கள் என அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பவானிசிங் “150 அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வுகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததாக தனது விளக்கத்தினை அளித்தார்.

மேலும் ஜெயலலிதாவின் சொத்து குறித்து முழுமையான ஆவணங்கள் அரசு வழக்கறிஞரிஅம் உள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, திமுக வழக்கறிஞர் குமரேசன் எழுந்து, ‘தங்களிடம் முழுமையான ஆவணங்கள் இருபதாக தெரிவித்தார்.

உடனே திமுக வழக்கறிஞரிடம் “தேவையில்லாமல் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்றும் வழக்கை முடிக்க மூன்று மாத கால அவகாசமே இருப்பதால் முக்கிய அம்சங்களை மட்டுமே தெரிவிக்குமாறும் நீதிபதி அவருக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply