ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பயங்கரமாக பரவி வரும் நிலையில் இந்நோய் பாதித்தவர்களும், நோய் அறிகுறி இருப்பவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி வருபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவித்துளனர்.
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் 100க்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருமலை திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால், பன்றிக் காய்ச்சல் கிருமிகள் மிக வேகமாகப் பரவும் ஆபத்து இருப்பதால் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களும், நோய் அறிகு உள்ளவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவஸ்தான சுகாதாரத் துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படியும் கூறப்பட்டுள்ளது.