பிரிட்டனின் போலி பிரதமருக்கு ஆதரவு கொடுத்த ஒபாமா. டுவிட்டரில் பரபரப்பு.

obamaஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரிட்டனின் போலி பிரதமரை பின் தொடர்வதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டுவிட்டரில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் டுவிட்டர் அக்கவுண்ட்டை பின் தொடர்வதற்கு பதிலாக அவருடைய போலியான பக்கத்தை பின் தொடர்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் டுவிட்டர் பக்கத்தை நிர்வகித்து வரும் ‘Organising For Action’ என்ற தனியார் நிறுவனம் வெறும் 382 பேர்களை மட்டுமே பின்தொடர்ந்து கொண்டிருக்கும் @davidcameron என்ற டேவிட்டின் போலியான பக்கத்தை தவறுதலாகப்  பின்தொடர்ந்துள்ளதாக ‘டெலிகிராஃப்’ பத்திரிகையின்  செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் உண்மையான பக்கம் @david_cameron என்பதாகும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த சில நாட்களுக்கு முன் “டேவிட் கேமரூன் எனது மிகச் சிறந்த நண்பர். உலக அளவில் கேமரூன் எனக்கு மிகவும் நம்பத்தக்க மற்றும் நெருக்கமான கூட்டாளியும் கூட” என்று கேமரூனின் `தவறான` பக்கத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply