ஒபாமாவின் இந்திய பயணத்தில் திடீர் மாறுதல். தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியா?

obama in tajmahalஇந்திய குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவை முடித்துவிட்டு ஜனவரி 27ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்லவிருப்பதாக இருந்தது.

ஆனால் அவரது ஆக்ரா பயணம் பாதுகாப்பு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த காரணத்தை அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை.

மேலும் அரசு தரப்பு வட்டாரத்தில் இருந்து கசிந்த செய்தியில், “ஒபாமா இந்தியாவிலிருந்து பயணத்தை ஒருசில நாட்கள் முன்னதாகவே முடித்துக் கொண்டு நாடு திரும்ப இருப்பதாகவும், அதன் காரணமாக தாஜ்மஹால் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஒபாமா வருகையை ஒட்டி, ஜனவரி 28-ம் தேதிக்கு முன்போ அல்லது அதற்கு பின்போ இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு ஜிகாதி அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply