நேற்றுதான் ஸ்ரீரங்கம் தொகுதியின் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் அவர்களுக்கு மூன்று எஞ்சினியரிங் கல்லூரி இருப்பதாகவும், அந்த கல்லூரிகளின் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்த வகைக்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரு.1.13 கோடி பணத்தை தர மறுத்ததுடன் சுப்பிரமணியம் அந்த நிறுவன உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சோழவந்தானை சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியம் மீது மதுரை ஐகோர்ட் கிளையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை பாரதிய ஜனதா வேட்பாளரை அறிவித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.